செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் பிரதான சாலையில், வேலப்பெருமாள் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டிற்கு முன்னால் சாலையில் இருந்த மரத்தை, அவர் இரவோடு இரவாக, உரிய அனுமதியின்றி வெட்டி உள்ளார். இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறுகையில், 'சாலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த மரத்தை, உரிய அனுமதி பெறாமல் இரவோடு இரவாக வெட்டி உள்ளார். அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.