காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலை பேராசிரியர்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றும் வகையில் 'ஆம் நம்மால் முடியும்' என்ற சிறப்பு கருத்துரை பயிற்சி முகாம் நடைபெற்றது.
துணை வேந்தர் சீனிவாசு தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று காஞ்சி சங்கரா பல்கலை. , உலக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிடிப்பதற்கு பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து ஆராய்ச்சி, ஆலோசனை, மற்றும் அனுபவ கற்றலின் வாயிலாக இலக்கை அடைவதற்குரிய வழிமுறைகள் குறித்து உரை நிகழ்த்தினார்.