வரும் 09. 06. 2024 தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்தேர்வு IV–னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
இதுகுறித்து செய்தி குறிப்பில், விண்ணப்பதாரர்கள், காலை 8. 30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 09. 00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், 12. 45 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண்(PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.