மைத்துனரை தாக்கியவர் கைது

69பார்த்தது
மைத்துனரை தாக்கியவர் கைது
திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. அவரது மனைவி சுபஸ்ரீ. தம்பதி இடையே, அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

அதே ஊரில் வசிக்கும் சகோதரர் சுதன்குமார், 37, என்பவரிடம், சுபஸ்ரீ தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த சுதன்குமார், நேற்று முன்தினம், மைத்துனர் பிரகாஷை கத்தியால் குத்தினார்.

இதில், பிரகாஷுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார், சுதன்குமாரை, நேற்று கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி