செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சூர்யா, 24. இவர், செங்கல்பட்டு பா. ம. க. , நிர்வாகிபடுகொலை செய்யப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மாதம் விடுதலையானவர், செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி வனப்பகுதியில் பதுங்கி, சதித்திட்டம் தீட்டி வருவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அனுமந்தபுத்தேரி காட்டுப் பகுதியில்போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசாரை கண்டதும் சூர்யா தப்பியோட முயன்று கீழே விழுந்ததில், இடது காலில் முறிவு ஏற்பட்டது.
அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.