செங்கை அருகே ஆத்துாரில் ரூ. 20 லட்சம் 'ஆட்டை'

65பார்த்தது
செங்கை அருகே ஆத்துாரில் ரூ. 20 லட்சம் 'ஆட்டை'
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 50; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம், சோழிங்கநல்லூர் பகுதியில் இந்த 76 சென்ட் வீட்டு மனையை விற்பனை செய்து, தன் பங்கு 20 லட்சம் ரூபாயை, வீட்டில் வைத்திருந்தார். 

கடந்த 18ம் தேதி, தன் மனைவி அகிலாண்டேஸ்வரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, வீட்டை பூட்டி சாவியை, வாசற்படி அருகில் எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி