உத்திரமேரூர் ஒன்றியம், அனுமந்தண்டலத்தில் சாலையோரம் பள்ளம் இடத்தில், வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுஉள்ளது.
இரு மாதங்களுக்கு முன் இச்சாலை வழியாக சென்ற அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் சாலை தடுப்பு சேதமடைந்துள்ளது.
இதனால், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதியில் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒதுங்கும்போது, சாலை தடுப்பு சேதமடைந்த பகுதி வழியாக பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலை தடுப்பை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.