புரட்சி பாரதம் கட்சியினர் இ சி ஆர் சாலையில் சாலை மறியல்

70பார்த்தது
சட்டமேதை அம்பேத்கர் குறித்து விமர்சித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டணம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் அமித்ஷா உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு.


தமிழகம் முழுவதும் மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் கூவத்தூர் சகாதேவன் தலைமையில் 100 க்கும் மேற்ப்பட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது அருகில் இருந்த போலீசார் உருவ பொம்மை எரிக்க முயன்றதை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you