காஞ்சியில் மழைநீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணி துவக்கம்

52பார்த்தது
காஞ்சியில் மழைநீர் வடிகால்வாய் அகலப்படுத்தும் பணி துவக்கம்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் ஒட்டியுள்ள பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் கால்வாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், மேல்தளம் அமைக்கப்படாமலும் இருந்தது.

இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 1. 20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி கால்வாய்க்கு, கான்கிரீட் தளம் அமைக்கவும், இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தவும், மொத்தம் 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி