செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மாவரம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த பம்பு ரூமில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகன் எவ்வித அனுமதியும் முறையாக வாங்காமல் ஊராட்சி தீர்மானம் போட்டு விட்டோம் என கூறி தனது சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து அதற்கு தனிநபர் ஒருவரின் பெயர் சூட்டி திறப்பு விழா செய்துள்ளார்.
இது சம்பந்தமாக திம்மாவரம் ஒன்றிய கவுன்சிலர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்ற ஒன்றிய குழு கூட்டத்தை புறகணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி சசிகலா தலைமையில் அரசு அதிகாரிகள் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலைய மின் இணைப்பை துண்டித்த நிலையில், அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, வட்டாச்சியர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, முறையான அனுமதி பெற்று வாருங்கள், அதன் பின்னர் மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.