காஞ்சிபுரம்: கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
காஞ்சிபுரம்: கல் குவாரி அனுமதியை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில், கல் குவாரி அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், ஏரி, குளம், குட்டை, காடு, விவசாய நிலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என, விவசாயிகளும், கிராமத்தினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். 

கல் குவாரி அமைப்பதை கண்டித்து எடமச்சி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எடமச்சி கிராமத்தில் கல் குவாரி அமைப்பதாக குற்றஞ்சாட்டும் விவசாயிகள் சங்கத்தினர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர். தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தலைவர் எம். எஸ். ஆனந்தன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கல்குவாரி அமைக்க அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி