உத்திரமேரூர் சாலை விரிவாக்க பணியை தடுத்து மக்கள் போராட்டம்.

65பார்த்தது
உத்திரமேரூர் சாலை விரிவாக்க பணியை தடுத்து மக்கள் போராட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சாலையின் நடுவே சென்டர் மீடியம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டியா பந்தல் கூட்ரோட்டில் இருந்து மீனாட்சியம்மாள் கல்லூரி வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் குடியிருப்பு பகுதிகளில் சாலையைக் குறுக்கே செல்ல வழிகள் அமைக்காததால் பொதுமக்கள் அந்தத் துறையின் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி