மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகளின் தாய் பலி.

64பார்த்தது
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகளுக்கு தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட ஓங்கூர் கிராமத்தில் வசித்து வருபவர் குணசேகரன் இவரது மனைவி புவனேஸ்வரி வயது 25.

குணசேகரன் புவனேஸ்வரி தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகனும் ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் புவனேஸ்வரி தனது வீட்டில் மின் விளக்கை போடுவதற்காக ஸ்விட்ச் போர்டில் கை வைத்துள்ளார், அது கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஈரமாக இருந்துள்ளது.

அப்போது அதில் கை வைத்த புவனேஸ்வரியை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்கும் அவர் கீழே சரிந்து விழுந்துள்ளார். அதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி