உத்திரமேரூர் அருகே உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சோழனூர் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் ஸ்மார்ட் பைனான்ஸ் பேங்க் இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சோழனூர் மா. ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை ஐஆர்டிடி தொண்டு நிறுவன தலைவர் சி. வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் மகேஷ், அரவிந்த், சந்தனா ஆகியோர் கலந்து கொண்டு பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை பொதுமக்களுக்கு அளித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் சுகாதார ஆய்வாளர் பிரவீன் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா வீராசாமி, ஊராட்சி செயலாளர்கள் வரகுண பாண்டியன் உட்பட ஏராளமா கலந்து கொண்டனர்.