காஞ்சியில் குப்பை தொட்டிக்கு செல்லும் மனு - அதிகாரி அலட்சியம்

53பார்த்தது
காஞ்சியில் குப்பை தொட்டிக்கு செல்லும் மனு - அதிகாரி அலட்சியம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலை, அருணாச்சல பிள்ளை சத்திரம் பகுதியில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. 

இந்த அலுவலகத்தின் வாயிலாக பெருநகர், திருப்புலிவனம், சாலவாக்கம் உட்பட 73 ஊராட்சிகளில், சாலை, குடிநீர் மற்றும் கட்டட வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு, மத்திய - மாநில அரசுகளின் வாயிலாக, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஆவணங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் கீழே போடப்பட்டுள்ளன. இதனால், ஆவணங்கள் சேதமடைந்து பாழாகும் சூழல் உள்ளது. 

தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்களும், குப்பை தொட்டிகளில் போடப்பட்டுள்ளன. பி.டி.ஓ. அலுவலகத்தில் போதுமான இடவசதி இருந்தும், ஆவணங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே, அலுவலக ஆவணங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி