காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை சைதாப்பேட்டை வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் காஞ்சிபுரம் பார் அசோசியேஷன், காஞ்சிபுரம்
அட்வகேட் சங்கம், காஞ்சிபுரம்
வழக்கறிஞர் சங்கம் என மூன்று சங்கங்கள் ஒன்றிணைந்து,
இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டு காஞ்சிபுரம் காமராஜர் சாலை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் செயலாளர் உமாசங்கரி, துணை தலைவர் சுதாகர், இணைச் செயலாளர் நரேஷ், பொருளாளர் கமலக்கண்ணன், நூலகர் சிவா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.