காஞ்சி வைகுண்டர் ஏழாம் நாள் உற்சவம்.

51பார்த்தது
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்ய தேசங்களில், 57வது திவ்ய தேசமாக திகழ்கிறது.

பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும், இக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி , தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏழாம் நாள் உற்சவமான இன்று வாழைமரம் தோரணம் கட்டி வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாள், மூன்று முறை இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக தேரை சுற்றி வந்து திருத்தேரில் அமர்ந்த கண்கொள்ளக் காட்சியை கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.

திருத்தேரில் கம்பீரமாக எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜவீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி