நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு

61பார்த்தது
நிலம் எடுக்கும் பணிக்கு பிற மாவட்ட தாசில்தார்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5, 700 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான, நிர்வாக அனுமதி 2023 அக்டோபர் மாதம் வெளியாகியது.

இத்திட்டத்திற்கு ஏகனாபுரம் கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எடையார்பாக்கம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில், நில எடுப்பு செய்வதற்கான அறிவிப்பை, வருவாய் துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அடுத்தக்கட்ட பணிகளை தீவிரமாக மேற்கொள்கின்றனர்.

நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள, 5, 700 ஏக்கர் நிலப்பரப்பை, நிர்வாக வசதிக்காக மூன்று மண்டலங்களாக பிரித்து, அதிலிருந்து 24 யூனிட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும், ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செயல்படுகிறது.

அதேசமயம், ஒவ்வொரு யூனிட்டிலும், ஒரு தாசில்தார், சர்வேயர் என, மொத்தம் 326 வருவாய் துறை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தேவைப்படும் 24 யூனிட்களுக்கு, 24 தாசில்தார்கள் தேவைப்படுகின்றனர்.

இதில், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட தாசில்தார்கள் பணியாற்றுகின்றனர். இதில், வெளிமாவட்ட தாசில்தார்கள் 4 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து தாசில்தார்களை அழைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்வதால், வருவாய் துறை சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்தி