கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

76பார்த்தது
கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகரில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை.

இதனால், குளியல் அறை, சமையல் அறை உள்ளிட்ட வீட்டு உபயோக கழிவுநீரை வீட்டின் பின்பக்கம் தோட்டம் அமைத்து, செடிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இடவசதி இல்லாதவர்கள் தெருவில் விட வேண்டிய நிலை உள்ளது. இதனால், அக்கம் பக்கத்து வீட்டினருக்கு சண்டை ஏற்படுகிறது. மேலும், மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, கருப்படிதட்டடை ஊராட்சி, காந்தி நகரில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி