மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதலே இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான மதுராந்தகம் கருங்குழி சோத்துப்பாக்கம் அச்சரப்பாக்கம் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளி காற்றுடன் சாரல் மழை செய்து வருகிறது இதன் காரணமாக பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஆனது ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.