காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்'திட்டத்திற்கு.. கைவிரிப்பு!

66பார்த்தது
காஞ்சியில் 'மல்டிலெவல் பார்க்கிங்'திட்டத்திற்கு.. கைவிரிப்பு!
காஞ்சிபுரத்திற்கு வரும், வெளியூர் கார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' அமைக்கும் திட்டம் பற்றி இரு ஆண்டுகளுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமாக நகரின் மத்தியில், 2 ஏக்கர் வரை இடமில்லாதது, அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இல்லாதது போன்ற காரணங்களால், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் போயுள்ளது.

தமிழகத்தில், முக்கிய கோவில் நகரமும், பட்டு சேலைக்கான உற்பத்தி நகரமாகவும் காஞ்சிபுரம் விளங்குகிறது.

ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் என முக்கிய கோவில்கள் உள்ளதால், வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அதேபோல, கைத்தறியில் நெய்த பட்டு சேலைகளை வாங்க, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தென்தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கார்களில் வந்து செல்கின்றனர்.

கோவில் மற்றும் பட்டு சேலை போன்ற காரணங்களுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு காரணங்களுக்காகவும் நாள்தோறும் பலர் காஞ்சிபுரம் நகருக்கு வருகின்றனர்.

வெளியூர்வாசிகள் கொண்டு வரும் கார்களை நிறுத்த போதிய இடமில்லாமல், சாலையிலேயே நிறுத்துவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்தி