உத்திரமேரூரில் சாலை விபத்தில் விவசாயி பலி

76பார்த்தது
உத்திரமேரூரில் சாலை விபத்தில் விவசாயி பலி
காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (65); விவசாயி. இவர், கடந்த 19-ல் பெருநகர் அடுத்த தேத்துறையில் உள்ள விவசாய நிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, பெருநகர் செய்யாற்று பாலம் அருகே செல்லும்போது, நிலைதடுமாறி சாலையோர இரும்பு தடுப்பின் மீது மோதி காயமடைந்தார். பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (டிசம்பர் 27) காலை ஜெயபிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி