தொழில் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

77பார்த்தது
தொழில் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024- - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.

எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழக அரசின் www. skilltrainint. tn. gov. in என்ற இணையதளத்தில், கடந்த மே 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற ஜூன் 7ம் தேதி கடைசி தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.

மேலும் 97892 42292, 94999 37449 என்ற மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி