வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, செல்லியம்மன் நகரில் வசிப்போருக்கு கூடுதல் குடிநீர் ஆதாரமாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலையோரத்தில் தெரு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பிரதான சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி வருகிறது.
இதனால், இப்பகுதியில் வசிப்போருக்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், ஆழ்துளை குழாயில் இருந்து நிலத்தடிநீரை உறிஞ்சும் மின் மோட்டாரும் விரைவில் பழுதடைவதோடு, மின்சாரமும் விரயமாகும் நிலை உள்ளது.
எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க, முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். "