உத்திரமேரூரில் ஐ ஜே கே கண்டன ஆர்ப்பாட்டம்.

459பார்த்தது
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உத்தரவின் பேரிலும், தலைவர் இளைய வேந்தர் அறிவுரையின் பேரில் தமிழகத்திற்கு காவிரி நீர் தராத கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்திய ஜனநாயக கட்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் அப்பு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை அமைப்பு செயலாளர் எஸ் எஸ் வெங்கடேசன் மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ஜெ இளவரசி தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்தும் அப்பாவி தமிழர்கள் இதனால் தாக்கப்படுவதாகவும் தேசிய நதி நீர் ஆணையத்தை கூட்டி தண்ணீர் திறக்க வலியுறுத்தும் வகையில் கண்டன உரை ஆற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களும், மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நீரை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி