உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம்.

81பார்த்தது
உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோக பொருட்கள் சேதம்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில் தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. பெரும்பாலும் கூலி வேலை மற்றும் சொந்த தொழில் செய்து வருபவர்களும் அதிகமாக வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்துள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக மிக குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அவ்வப்போது உயர் அழுத்த மின்சாரம் என மாறி மாறி வருவதால்,

வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களான மிக்ஸி, பிரிட்ஜ் , ஏசி , ஃபேன் , ஹீட்டர் உள்ளிட்ட பல மின் சாதன பொருட்கள் டேமேஜ் அடைவதாக அப்பகுதி மக்கள் கரசங்கால் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.

கரசங்கால் பகுதியில் 230 கிலோ வாட் துணை மின் நிலையமும் , 110 கிலோ வாட் திறன் உடைய துணை மின் நிலையங்கள் இருந்தும் வஞ்சுவாஞ்சேரி கிருஷ்ணர் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் 'லோ வோல்டேஜ்' காரணமாக மின்சார பொருட்களை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி