செல்வத்திற்கு சாலவாக்கம் ஒன்றியம் பிரமாண்டமான வரவேற்பு.

66பார்த்தது
செல்வத்திற்கு சாலவாக்கம் ஒன்றியம் பிரமாண்டமான வரவேற்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் அந்த ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சிறுவேடல் க. செல்வத்திற்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.

பொதுவாகவே காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் ஒன்றிய திமுக என்றாலே அந்த ஒன்றிய செயலாளர் குமார் பிரமாண்டமான நிகழ்ச்சிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அந்த அளவுக்கு திமுகவின் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவதில் வல்லவர் அவர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வத்திற்கு இன்று பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்த குமார் ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து கௌரவித்தார்.

மேலும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்தரமேர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி