வெங்கப்பாக்கம் அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூமி பூஜை

58பார்த்தது
வெங்கப்பாக்கம் அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்ட பூமி பூஜை
வெங்கப்பாக்கம் தொடக்கப் பள்ளிக்கு, 1. 47 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, நேற்று முன்தினம் பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.


கல்பாக்கத்தில், இந்திய அணுமின் கழகத்தின் கீழ், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதி அரசுப் பள்ளிகளுக்கு, வகுப்பறை கட்டடம் கட்டி வழங்குகிறது.

வெங்கப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பாழடைந்த கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டடம் கட்ட, அணுமின் நிலைய நிர்வாகத்திடம் அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

நிர்வாகம் பரிசீலித்து, 1. 47 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டவுள்ளது. இக்கட்டடம், தரை, முதல், இரண்டாம் தளங்களில், தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்டப்படும்.

நிலைய இயக்குனர் சுதிர் பி ஷெல்கே, நேற்று பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். சமூக பொறுப்புக்குழு உறுப்பினர் செயலர் ஜெகன், ஊராட்சித் தலைவி வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி