விழிப்புணர்வு பேரணி
By Rajasekar 83பார்த்ததுதேவரியம்பாக்கம் கிராமத்தில் நேற்று, 'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்து, விழிப்புணர்வு பிரசார பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஊராட்சி கட்டடத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி கட்டடத்தை வந்தடைந்தது.
இதில், மகளிர் சுயஉதவிக் குழுவினர், துாய்மை காவலர், துாய்மை பணியாளர்கள், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினர்.