காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கள்ளச்சாய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வி சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் சுமார் 60 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றார்கள். 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பார்வை முழுமையாக செழலிழந்து விட்டது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, திமுக அரசைக் கண்டித்தும்,
கள்ளச் சாராயம் அருந்தியதால் 60 கற்கும் மேற்பட்ட்டோர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய
திமுக அரசின் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இந்த மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது என பேசினார்.
திமுக அரசை கண்டித்தும், முதல்வர் மு க ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.