காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த, ஆலத்தூர் கிராமத்தில், அரசு கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளுக்கு, செயற்கை கருவுறுத்தல், கோமாரி தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கால்நடை மருந்தகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் அங்கேயே அமர்ந்து, மது அருந்தி பாட்டில்களை உடைத்து, அங்கேயே போட்டுச் செல்கின்றனர். மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மருந்தகத்திற்குள் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.