சென்னை அடுத்த நீலாங்கரை, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி, 52. இவர், எட்டு குடிசை வீடுகள் கட்டி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில், ஜெகநாதன் என்ற தொழிலாளர், வீட்டில் சமையல் செய்யும்போது, எதிர்பாராத விதமாக தீப்பொறி குடிசையின் ஓலையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீயால், அடுத்தடுத்துள்ள எட்டு குடிசைகளும் பற்றி எரிந்தன. தகவல் அறிந்து, திருவான்மியூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. கும்பகோணம் தீ விபத்திற்கு பின், சென்னையில் குடிசை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.