படுரை சேர்ந்த 6 வயது சிறுவன் ரக் ஷன் நீச்சலில் உலக சாதனை

50பார்த்தது
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மற்றும் அருணா தம்பதியரின் இளைய மகன் ரக் ஷன் (Rakshan) UKG THINKRITE ACADEMY பயின்று வருகிறார். வயது 6.
தற்போது செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் வசித்து வருகிறார் இவர் இதுவரை இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். இதில் இரண்டு சாதனைகள் லிங்கன் புக் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்துள்ளது. அதே போல இவரது சாதனையை வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது
பயிற்சியாளறின்றி நீச்சல் கற்ற ஒரே மாதத்தில் இரு கைகளை பின் புறம் கட்டியபடி 28 மீட்டர் தூரத்தை 1. 59 நொடிகளில் நீந்தி முதலில் உலக சாதனை படைத்தார். இந்த சாதனை ஜூன் 30 2024 அன்று நடைபெற்றது அதே போன்று தனது இரண்டாவது சாதனையை நிகழ்த்தி தனது முந்தைய சாதனையை முறியடித்தார். இரண்டு கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு மூச்சு விடாமல் 25 மீட்டர் தூரத்தை 33 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்த இரண்டு சாதனைகளையும் லிங்கன் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல் நேரில் ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார் சிறுவனை பாராட்டும் விதமாக படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் KAS சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை படைத்த சிறுவன் ரக் ஷன் (rakshan) க்கு மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி