அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு

3985பார்த்தது
அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி, 24. இவரது உறவினர் மதன் கவுதம், 26.இவர், சென்னையில் இருந்து வரும் உறவினரை அழைத்துவர, தன் 'ஹோண்டா சைன்' பைக்கில், உறவினர் மதன்கவுதம், 26, என்பவருடன், எல்லையம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.

முதலியார்குப்பம், வாஞ்சிக்கரை அருகே, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி, மதன்கவுதம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யூர் போலீசார், இருவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கிழக்கு கடற்கறை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி