செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் மாடுகளை வளர்த்து பால் விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் மாடுகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் அப்பகுதிகளிலும் மேய்ச்சலுக்காக விடப்படும்
இந்த நிலையில் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை ஒரு கும்பல் தொடர்ந்து கடத்தி வருவதாக புகார்கள் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் இருந்தன
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் தன் வீட்டின் அருகாமையில் கட்டி வைத்திருந்த எட்டு மாடுகளை காணவில்லை என கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது அதை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் பின்பு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்