மாமல்லபுரம், அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கிராவல் மண் ஏற்றிக் கொண்டு, டிப்பர் லாரி சென்றது. அங்குள்ள பேரி கார்டு தடுப்புகள் இடைவெளியில் கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறமாக மைய தடுப்பை ஒட்டி கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுனர், உடனிருந்த இரண்டு பேர் உயிர் தப்பினர். கிரேன் மூலம் லாரி துாக்கி நிறுத்தப்பட்டது. மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.