வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 6 நாட்கள் தை திருநாளாம் தமிழர்களின் மிக பண்டிகையில் ஒன்றான பொங்கல் பண்டிகை முன்னிட்டு பள்ளி கல்லூரி, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களுடன் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அதே போல் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக அதிக அளவிலான அரசு பேருந்துகள் தென் மாவட்டங்களை நோக்கி செல்வதால்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தம்பிக்கு தொடங்கி இருக்கிறது
குறிப்பாக விழா காலங்களில் அதிக அளவிலான வாகனங்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்வது வழக்கம்
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான வாகனங்கள் இன்று மாலை முதல் செல்ல துவங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெசில் ஈடுபட்டு நீண்ட வரிசையில் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.