திருப்போரூர் - -கேளம்பாக்கம் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்

457பார்த்தது
திருப்போரூர் - -கேளம்பாக்கம் தரைப்பாலம் கட்டும் பணி தீவிரம்
திருப்போரூர் - -கேளம்பாக்கம் ஓ. எம். ஆர். , சாலை இடையே, தையூர் ஊராட்சி செங்கண்மாலில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு எதிரே, சிமென்ட் குழாய்கள் பொருத்தப்பட்ட தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக, தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வெளியேறும் மழை நீர் அருவி போல் வெளியேறுகிறது. வெளியேறும் உபரி நீர், பகிங்ஹாம் கால்வாயில் கலந்து, கோவளம், முட்டுக்காடு வழியாக கடலில் கலக்கிறது. இந்த தரைப்பாலத்தில், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழாய், 1 மீட்டர் இடைவெளியில் குறுகியதாக இருந்ததால், மழை காலத்தில் வெள்ள நீர் வெளியேறுவதில் சிக்கல் இருந்தது. எனவே, சிமென்ட் குழாய் பொருத்திய தரைப்பாலத்தை அகற்றி, புதிய தரைப்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதையடுத்து, நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ், 43. 43 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலத்தில், புதிய கான்கிரீட் தரைப்பாலம் அமைக்க, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, போக்குவரத்துக்கு ஒரு பக்க சாலை விடப்பட்டு, மறுபக்கத்தில் தடுப்பு அமைத்து, புதிய தரைப்பாலம் பணிகள் நடந்து வருகின்றன. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில், தண்ணீர் ஊற்று வந்து, குளம் போல தேங்கியிருந்தது. மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி