குறைதீர் கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

80பார்த்தது
செங்கல்பட்டில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குளறுபடி, முறையாக வராத அதிகாரிகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு


கூட்ட அரங்கில் 20 நிமிடம் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் அவதி


___


தமிழ்நாடு முழுவதும் திங்கட்கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் நாள் அன்று, மாவட்டத்தில் இருக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பதால் மக்கள் கொடுக்கும் மனுகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் எப்பொழுதுமே திங்கட்கிழமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தன்று, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனு கொடுக்க வருவது வழக்கமாக உள்ளது.



அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் துறை தேர்வு கூட்டத்திற்கு 10 மணிக்கு மேல் ஆகியும், அதிகாரிகள் வராமல் இருந்ததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரும் வரவில்லை , மனுவை வாங்குவதற்கு வேறு அதிகாரிகளும் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி