திருப்போரூர் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், அருங்குன்றம் ஊராட்சியில் மானிய விலையில் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் அன்பரசு, தோட்டக்கலை உதவி அலுவலர் கோபிநாத், துணை அலுவலர் நடராஜன் பங்கேற்று, 2023- - 24-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 300 பயனாளிகளுக்கு மானிய விலையில், தலா ஐந்து வகையான பழக்கன்றுகள், இரண்டு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட ஐந்து வகையான பழ மரக்கன்றுகள், இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில், ஐந்து வகையான பழ மரக்கன்றுகளின் விலை 200 ரூபாய். ஆனால், மானிய விலையில் 50 ரூபாய்க்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. தென்னங்கன்றுகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டன.