பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு

57பார்த்தது
பேருந்து நிலையத்தில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள காமராஜர் சாலையில், ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்குடை போதிய வசதிகள் இல்லாத நிலை இருந்தது.

காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , எழிலரசன், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஏ. டி. எம். , கழிப்பறை வசதியுடன் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம், எம். எல். ஏ. , எழிலரசன் திறந்து வைத்தார்.

அதன்பின், இந்த நிழற்குடையில், இரவில் மின் விளக்கு எரியாமலும், 'ஏசி' இயங்காமலும் இருந்ததால், இரவில் பயணியர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, நிழற்குடையுடன் கட்டப்பட்ட கழிப்பறைக்கு, கழிவுநீர் இணைப்பு கொடுக்காமலேயே, எம். எல். ஏ. , திறந்து வைத்தார்.

கழிவுநீர் இணைப்பு கொடுக்கவில்லை என்ற விமர்சனம், சில மாதங்களாக இருந்த நிலையில், கழிப்பறைக்கு அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் திடீரென கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள மழைநீர் கால்வாயில், ஏற்கனவே முறைகேடாக வணிகர்கள் பலரும் கழிவுநீர் இணைப்பை கொடுத்துள்ள நிலையில், அதன் வரிசையில், அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறைக்கான இணைப்பையும் மழைநீர் கால்வாயில் கொடுத்திருப்பதை பார்த்தும் பயணியர் கிண்டல் செய்கின்றனர்.

பயணியர் நிழற்குடைகள் தரமற்று, முறையின்றி காஞ்சிபுரத்தில் கட்டப்படுவது தொடர்கிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி