காஞ்சிபுரம்: குப்பையை தரம் பிரித்து கையாள வேண்டுகோள்

81பார்த்தது
காஞ்சிபுரம்: குப்பையை தரம் பிரித்து கையாள வேண்டுகோள்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், வைப்பூர், கூழாங்கல்சேரி, வஞ்சுவாஞ்சேரி, வெள்ளேரித்தாங்கல், காரணித்தாங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக், குப்பை கழிவை, ஊராட்சி துய்மை பணியாளர்கள் வாயிலாக நாள்தோறும் அகற்றப்படுகின்றன. அவ்வாறு சேகரமாகும் குப்பை, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலையோரம் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், பேரீஞ்சம்பாக்கம் செல்லும் மக்கள், புகை மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர். திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பை கழிவை உண்ணும் கால்நடைகளுக்கு நோய் வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை, தரம் பிரித்து கையாள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி