சாலையோர புதர்களை சீரமைக்க கோரிக்கை
By Rajasekar 68பார்த்ததுஅச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடில் இருந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இங்கு, தொழுப்பேடு- - ஒரத்தி செல்லும் சாலையில், எடையாளம் ஆற்றுப்பாலத்தின் மீது இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
தற்போது, பெய்து வரும் பருவமழை காரணமாக, இரும்பு தடுப்பு வேலிகளை மறைத்து, சாலையின் இருபுறமும் மரம், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது.
எனவே, புதர்களை அகற்றி, இரும்பு தடுப்பு வேலிகளில், இரவில் ஒளிரும் எதிரொலிப்பான்கள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.