கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்படி, தீயணைப்பு மாநில பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில், 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை, பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை, தீயணைப்பு துறை குழுவினர், மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.