திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கீழூர் ஊராட்சியில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கீழூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பிரச்சாரக் குழு செயலாளர் சேலம் சுஜாதா மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் செங்கை சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு திமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினர். அதனை தொடர்ந்து 15 பெண்களுக்கு தையல் இயந்திரம், 2500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் திருப்போரூர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சத்யா சேகர், மாவட்டக் கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் மற்றும் திருமலை, சுப்பிரமணி, மதுரவேல், ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதி பரந்தாமன், ரவிக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.