மதுராந்தகம் நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம்

50பார்த்தது
மதுராந்தகம் நகர திமுக சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!


காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுராந்தகம் நகர கழக செயலாளர்
குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம்
திமுக மாநில மகளிர் அணி தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வாரிய தலைவர் விஜயாதாயன்பன்
ஆகியோர் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி