தரைப்பாலம் உடைந்து சேதம்; திருக்கச்சூரில் விபத்து அபாயம்

52பார்த்தது
தரைப்பாலம் உடைந்து சேதம்; திருக்கச்சூரில் விபத்து அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு, திருக்கச்சூர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில், பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் தெற்கு மாடவீதி, காந்தி தெரு சந்திப்பு அருகில், சிறு தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக, மழைக்காலத்தில் அருகில் உள்ள குளம் மற்றும் ஏரிகளுக்கு நீர் செல்லும். இந்த சிறு பாலத்தின் நடுவே, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது: சாலை நடுவே, தரைப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இதில் வாகனஓட்டிகள், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சில நாட்களுக்கு முன், பெண் ஒருவர் கால் இடறி கீழே விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது, பள்ளம் அடையாளம் தெரியும் வகையில், மரக்கிளைகள் மற்றும் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன், இந்த பகுதியில் மீண்டும் புதிய தரைப்பாலம் அமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி