புதர் மண்டி கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்

61பார்த்தது
புதர் மண்டி கிடக்கும் பறிமுதல் வாகனங்கள்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.


இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை ஏற்றி செல்லும் பணியை, சுகாதார ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதுதவிர, துணை சுகாதார நிலையத்தில் இருந்து, ஆய்வுக்கு செல்லும் அலுவலர்களின் ஜீப் மற்றும் லோடு வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.

ஓராண்டிற்கு மேலாக சேதம் ஏற்பட்டு இருக்கும் ஜீப் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகனங்களின் இடையே புதர் மண்டிக் கிடக்கிறது.

விஷ ஜந்துக்களின் நடமாட்டம் சுகாதரா நிலைய வளாகத்தில் இருப்பதால், சுகாதார துறை ஊழியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, சேதம் ஏற்பட்டு பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி