திருப்போரூர்: ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் குருபூஜை பெருவிழா

50பார்த்தது
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்போரூர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366வது ஆண்டு குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பர சுவாமிகளை தரிசனம் செய்தனர். 

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் மூலவர் கந்தசாமி பெருமானை தனது திருக்கரத்தால் கோவிலில் பிரதிஷ்டை செய்த ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366வது ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று (ஜூன் 9) வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு பால், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிதம்பர சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி