மதுராந்தகம் கோவில் குளத்தில் உள்ள இரும்பு கேட்டில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த வெளிநாட்டு பறவையை மீட்ட தீயணைப்புத் துறையினர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்து மீண்டும் தன்னுடைய நாட்டுக்கு செல்வது வழக்கம் இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக வந்த வெளிநாடு கூழைக்கடா பறவை மதுராந்தகம் ராமர் கோவில் குளத்தில் உள்ள இரும்பு கேட்டில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் நீண்ட நேரமாக அவதிப்பட்டு வந்தது.
அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
அங்கு வந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் பறவையை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின் பறவையை வனத்துறை அதிகாரிகள் மதுராந்தகம் ஏரியில் விட்டனர்.